தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் மூன்று நாள்களாகக் காணாமற்போன நிலையில் சங்கானை மண்டிகைக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகலைச் சேர்ந்த கடம்பன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளரான அவர் மூன்று நாள்களாக காணாமற்போயிருந்தார் என்று இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.