மோட்டார் சைக்கிள் - உழவு இயந்திரம் விபத்து! ஒருவர் பலி!! (படங்கள்)

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் வண்டி நெல் வெட்டும் இயந்திரம் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தில் மோதி குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர நிக்கசீல என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் செல்வபுரம் பாண்டியன் குளம் பகுதியை சேர்ந்த விமல் விக்னேஷ் என்பவர் படுகாயம்அடைந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மாஞ்சோலை வைத்யசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பாண்டியன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்ன நாயக தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Previous Post Next Post