பதவி விலகுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி ஜெயசுந்தர தனது நண்பர் ஒருவருக்கு சர்ச்சைக்குரிய வட்ஸ் அப் செய்தியொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நண்பர் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார். ஜெயசுந்தர பதவி விலகுகிறார் என்று கேள்விப்பட்டு, இலங்கையில் என்ன நடக்கிறது என்று வட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
அதற்கு பி.பி ஜெயசுந்தர வார்த்தைகள் கொண்ட மிகச் சிறிய பதில் வழங்கியுள்ளார். 6 வார்த்தைகள் மட்டுமே என்றாலும், அது மிகவும் தீவிரமான அர்த்தம் கொண்டது.
‘Only god can save our country’ என்று பதிலளித்துள்ளார். அதன் தமிழ் பொருள் ‘கடவுளால் மட்டுமே நம் நாட்டைக் காப்பாற்ற முடியும்’ என்பதாகும்.