2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நிலவும் கோவிட்-19 சூழ்நிலை காரணமாக உயர்தர மாணவர்களுக்கு கல்வியை முடிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வியலாளர்களாலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பரீட்சையை குறைந்தது 20 வாரங்களுக்கு ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.