யாழ்ப்பாணத்தில் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் தங்க நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை, அரியாலை பிரதேசத்தில் புதிதாக திருமணம் செய்த தனது மனைவிக்காக தங்க மாலையை கொள்ளையடித்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வவுனியா, நெடுங்கேணி பிரதேச வீடு ஒன்றில் பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கொள்ளையர் குடிப்பதற்கு நீர் கோரியுள்ளார்.
நீர் வழங்கிய சந்தர்ப்பத்தில் பெண்ணின் இரண்டரை பவுண் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடவடிக்கை மேற்கொண்ட வவுனியா பிரிவு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் குறித்த கொள்ளையர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். நிரந்தர வருமானம் இல்லாமையினால் தனது மனைவியின் அவசியத்தை பூர்த்தி செய்வதற்காக இவ்வாறு தங்க சங்கிலியை கொள்ளையடித்துள்ளார்.
தங்கு இடமின்றி பிரதேசங்களின் பல இடங்களில் வாடகைக்கு தங்கிருந்து இந்த நபர் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவராகும். அவர் போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.