நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு!


எரிசக்தி அமைச்சு எரிபொருளை விநியோகிக்காவிட்டால் இன்று மாலை 5.30 மணிதொடக்கம் இரவு 9:30 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் மின்வெட்டு நீடிக்கும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இம்மாதம் 23ஆம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கவில்லை.

எரிபொருளுக்கான கட்டணத்தை மின்சார சபை செலுத்தாததே இதற்குக் காரணம்.

எவ்வாறாயினும் எரிபொருளை உரிய முறையில் பெற்றுக் கொண்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post