புத்தாண்டு நாளான நேற்று வடக்கில் ஏற்பட்ட பல்வேறு அசம்பாவிதங்களில் சிக்கி ஐவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் கேப்பாப்புலவின் பிலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது 48), சூரியகுமார் கரிதாஸ் (வயது 17) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த சண்முகம் நிறோஜன் (வயது 23) என்ற இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதேவேளை,
யாழ்.கோண்டாவிலில் இருந்து காரைநகர் கடலுக்கு நீராடச் சென்று அங்கு நீரில் மூழ்கி யாழ்.இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த 17 வயதுடைய யோகராசா யோசீசன் என்ற மாணவனாவார்.
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். கார்த்தி (வயது 28) என்பவரே கொல்லப்பட்டவராவார்.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஊடக நிறுவனம் ஒன்றின் ஹப் ரக வாகனம் முச்சக்கரவண்டி மீது மோதியில் படுகாயம் அடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான ரஜீவன் (வயது 35) என்பவராவார்.