யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் கார் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் வத்தள வனவாசல பகுதியில் ரயில்வே கடவையூடாக கடந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிந்ததுடன் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை ஹுனுப்பிட்டிய கந்தகே மாவத்தையைச் சேர்ந்த பிரியந்த பெர்னாண்டோ (55) என்பவரே உயிரிழந்தவராவார். 

புகையிரதத்தில் மோதிய கார் , சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று தீப்பிடித்தது.புகையிரதத்தின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் இணைந்து அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.







Previous Post Next Post