வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்த போது குறித்த இளம் யுவதி வீட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதும், அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மணிபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய தங்கவேல் திவ்யா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதுடன், யுவதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.