இதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படும்.
இதன்படி, உரிய பெயர்கள் அரசிதழ் அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொடர்ச்சியாக மூன்று அமர்வுகள் அல்லது 90 நாள்கள் சபைக்கு வராத காரணத்தினால் பதவியை இழந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை மீண்டும் நியமிக்க முடியாது என்றும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.