யாழில் தந்தையின் வங்கியிலிருந்து பணத்தைத் திருடி நண்பர்களுக்கு மதுபான விருந்து வைத்த மாணவன்!


யாழில் தந்தையின் பணத்தை திருடி தனது பிறந்தநாளுக்கு பாடசாலை நண்பர்களுக்கு மதுபான விருந்து வைத்த 17 வயதான மாணவனை பொலிசார் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.

தனது பண அட்டையிலிருந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை தனக்கு தெரியாது யாரோ எடுத்துவிட்டார்கள் என தந்தை கொடுத்த முறைப்பாட்டை விசாரித்த போதே குறித்த மாணவர் சிக்கியுள்ளார். யாழில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 17 வயதான மாணவனே இவ்வாறு பிடிப்பட்டுள்ளார். 

தந்தையின் பண அட்டையை திருடி பணத்தை எடுத்த பின்னர் தனது தந்தையின் தொலைபேசிக்கு வரும் பணம் எடுத்ததற்கான அலேட் மெசேஜ்சையும் தந்திரமாக மகன் அழித்துள்ளார்.

இதனையடுத்து தந்தை இன்னொருதடவை வங்கியில் பணம் எடுக்க சென்ற போது 60 ஆயிரம் ரூபா பணம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தன்னியக்க பண இயந்திரத்தில் வரும் பற்றுச்சீட்டில் இருந்து அறிந்துள்ளார்.

இதனையடுத்து வங்கியில் பணம் எடுத்தால் தனது தொலைபேசிக்கு அலேட் வருமே என நினைத்து தொலைபேசியை பரிசோதித்த போது அவ்வாறான அலேட் இருக்கவில்லை. அது குறித்து வங்கியுடன் தொடர்பு கொண்ட தந்தை தனது பணம் காணாமல் போனது தொடர்பாக முறையிட்டுள்ளார்.

வங்கியின் அறிவுறுத்தலுக்கு இணங்க பொலிசாரிடம் முறையிட்டு ஓரிரு வாரங்கள் கழிந்த நிலையில் பொலிசாரின் தீவிர விசாரணையில் தந்தையின் பணத்தை மகனே களவாடியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post