யாழ். குடாநாட்டில் நேற்று ஒரே தினத்தில் இருவர் டெங்கு நோய் பாதிப்பு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலைய மாணவன் வ.அஜய் (வயது 11) மற்றும் கஜந்தினி யோகராசா, 2 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 18 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
டெங்கு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமயம் உயிரிழந்துள்ளனர்.
இவர்களது மரணங்களின் பின்னர் குடாநாட்டில் டெங்கு பரவல் அச்சமும் அதிகரித்துள்ளது.