யாழில் விபத்து! 18 வயது இளைஞன் உயிரிழப்பு!!


யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பஉயிரிழந்துள்ளார். 

இன்று காலை தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் மணல் ஏற்றி வந்த கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் எதிரெதிரே மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கனரக சாரதி காங்கேசந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், இளவாலை, உயரப்புலத்தை சேர்ந்த 18 வயதுடைய சசிக்குமார் லிசான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post