வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நெதர்லாந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நெதர்லாந்தைச் சேர்ந்த காலிடியன் நிஷா கடோன் (67) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் 37 வயதுடைய உள்ளூர் ஆணுடன் மாடி வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளமான டிக்ரொக் மூலம் சிங்கள இளைஞர் ஒருவருடன் அறிமுகமாகி, இணையத்திலேயே காதல் மலர, அந்த காதலனைத் தேடி இலங்கைக்கு வந்துள்ளார்.
ரிக்ரொக் காதலனுடன் வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ளார்.
மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சடலம் தற்போது களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.