இன்றைய தினமும் நான்கரை மணிநேரங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் இன்று வியாழக் கிழமையும் 4 மற்றும் நான்கரை மணி நேர மின்வெட்டு அமுல் செய்யப்படவுள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களில் மின்பிறப்பாக்கிகளை இயக்க தேவையான எரிபொருள் இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி இலங்கை மின்சார சபையால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மின்வெட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.
நாட்டை 11 வலயங்களாக பிரித்து இரண்டு கட்டங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று அமுல் செய்யப்பட்டது போன்று A, B, C பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு இன்றும் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய (P, Q, R, S, T, U, V, W) பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.