யாழ்.அராலி - செட்டியார்மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கட்டுப்படுத்த முடியாத அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. அத்துடன் வீதி அபிவிருத்தி நிறைவடைந்த நிலையில் வீதியின் ஓரத்தில் போடப்படவேண்டிய எல்லைக்கோடு இன்னமும் போடப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் குறித்த இடத்தில் வேகக் கட்டுப்பாட்டு தடை போடப்படவேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
உடையார் கட்டு - விசுவமடு பகுதியை சொந்த இடமாகக் கொண்டு, வட்டு. மேற்கு - வட்டுக்கோட்டை பகுதியில் வசித்துவந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வட்டு. மேற்கு - வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.