யாழ்.கொக்குவில் பகுதியில் ரயில் மோதி இளம் பெண் உயிரிழப்பு! (வீடியோ)

யாழ்.கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்று குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் என்பவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Previous Post Next Post