மாவிட்டபுரம் பகுதியில் ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டவர் தொடருந்துடன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில், அறியாமையால் பயணிக்க முற்பட்ட வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது – 46) என்பவரே உயிரிழந்தார்.
காங்கேசன்துறையில் இருந்து , கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.