கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 198 புள்ளிகள் பெற்று சாதனை!


2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு 9.55 மணிக்கு பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில் நேற்றிரவு 10.20 மணிவரை உத்தியோகபூர்வமாக வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பிரிவில் கொக்குவில் இந்துக் ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளியாக 148 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post