அனுமதி அடிப்படையில் மட்டும் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களின் பட்டியலில் 367 பொருட்களை உள்ளடக்கி விசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.
இதற்கமைய, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்களில் அப்பிள், தோடம், மற்றும் திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும், வெண்ணெய், நீர், வெளிநாட்டு மதுபானங்கள், அழகுசாதன பொருட்கள் என்பனவும் அடங்குகின்றன.
இதற்கு மேலதிகமாக இசைக் கருவிகள், விளையாட்டு மற்றும் இலத்திரனியல் பொருட்கள் என்பனவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகாரியினால் அனுமதி பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னதாக நிதியமைச்சின் செயலாளரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
367 பொருட்கள் தொடர்பான அட்டவணையை பார்வையிட