- பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உருவாகி இருக்கின்ற போர்ப் பதற்றம் விண்வெளியில் இரு நாடுகளினதும் கூட்டுச் செயற்பாடுகளில் எந்தப்
பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.அங்கு அமைதி நிலவுகிறது என்பதை நாசா
அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் சர்வதேச விண்வெளி நிலையத்தை (international space station) ரஷ்யா வின் துணையின்றி அதன் சுற்றுப்பாதையில் வைத்திருப்பதற்கான தீர்வு ஒன்றை காண்பதற்கான முயற்சிகளில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் (international space station) அமெரிக்கா - ரஷ்யா இரு நாடுகளினதும் கூட்டு நடவடிக்கைகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. உக்ரைன் போர்ப் பதற்றம் அதில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருபக்கத்து விண்வெளி அறிவியல் குழுக்களும் வழமைபோலத் தங்களுக்குள் தொடர்புகளையும் பரிமாற்றங்களையும் பேணிக் கூட்டாக இயங்கி வருகின்றன.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் சரியான செயற்பாட்டிற்கு ரஷ்யாவின் பங்கு அவசியமாகும். அதன் உந்து விசை அமைப்பு (propulsion system) சுற்றுப் பாதையில் சீரமைப்புகளைச் செய்வதற்குப் பெரிதும் உதவுகின்றது.
இந்த நிலையில் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(Russian space agency,) பணிப்பாளர் திமித்ரி ரோகோஸின் (Dmitry Rogozin) கடந்த வாரம் தொடர்ச்சியாகப் பதிவிட்ட ருவீற்றர் செய்திகளில், அமெரிக்கா தங்கள் கூட்டுச் செயற்பாட்டைக் குலைக்க விரும்புகிறது என்று குற்றம் சுமத்தியிருந்தார்.
"சர்வதேச விண்வெளி நிலையம் அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகி கட்டுப்பாட்டை இழந்தால் அது அமெரிக்கா மீதோ அல்லது ஐரோப்பா மீதோ வீழ்வதை ரஷ்யாவின் உதவி இல்லாமல் உங்களால் தவிர்க்க முயுமா"? - என்றும் அவர் பீதியூட்டும் கேள்வியை எழுப்பி இருந்தார்.அவரது ருவீற்றர் பதிவுகள் ஒருவித பதற்ற நிலைமையை விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தியது.
இதேவேளை, பிரெஞ்சு கயானாவில் (French Guiana) உள்ள குரோவ் (Kourou) விண்வெளி ஏவுதளத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருக்கிறது.

உக்ரைன் ஆக்கிரமிப்புக் காரணமாக ரஷ்யா சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விண்வெளி பாதுகாப்புத் தொடர்பான கவலைகள் எழுந்துள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையம் (international space station) அமெரிக்கா - ரஷ்யா இரு நாடுகளினதும் கூட்டு நடவடிக்கைகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. உக்ரைன் போர்ப் பதற்றம் அதில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருபக்கத்து விண்வெளி அறிவியல் குழுக்களும் வழமைபோலத் தங்களுக்குள் தொடர்புகளையும் பரிமாற்றங்களையும் பேணிக் கூட்டாக இயங்கி வருகின்றன.
எனினும் நாசா (NASA) நிலைமையை மதிப்பீடு செய்துவருகின்றது- என அதன் இணை நிர்வாகிகளில் ஒருவரான கதி லூடேர்ஸ் (Kathy Lueders) தெரிவித்திருக்கிறார்.