மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.
புத்தூரில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது.
சம்பவத்தில் மாசிலாமணி குகபிரகாசம் (வயது-59) அவரது மனைவி குகபிரகாசம் சுகுனா (வயது- 55) என்பவர்களே உயிரிழந்தனர்.
மின் இணைப்பு வயர் துண்டித்து தண்ணீரில் மின் ஒழுக்கு ஏற்பட்டதால் இந்த இடர் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
மகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று மாலை வீட்டுக்கு சென்ற போது வீட்டில் பெற்றோர் இருக்கவில்லை.
இதனையடுத்து தேடியபோது தண்ணீர்த் தொட்டி அருகில் தாய் தந்தையர் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
நீர் இறைக்கும் மோட்டாருக்கு செல்லும் வயரில் மின் ஒழுக்கு ஏற்பட்டு வாழை மரத்திற்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. நீர்த் தொட்டியில் வாழை இலை தொடுகையாகியிருந்துள்ளது.
வாழை இலை ஊடாக தொட்டியில் உள்ள தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வாழை இலை ஊடாக தொட்டியில் உள்ள தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.