பால் மாவின் விலை மீண்டும் எகிறியது!


பால் மாவின் விலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்ததன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 300 ரூபாயினால் அதிகரிக்கப்படும். 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 120 ரூபாயினால் அதிகரிக்கப்படும்.

இது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post