இலங்கையில் அனைத்து வகை பெற்றோல் மற்றும் டீசல்களின் விலையை அதிகரித்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு அனுமதியளித்துள்ளது.
அதன்படி, பெற்றோல் லீற்றருக்கு 77 ரூபாயும், டீசல் ஒரு லீற்றர் 50 ரூபாயும் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி பெற்றோலின் விலை 254 ரூபாயும் டீசலின் விலை 176 ரூபாயும் என விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை 283 ரூபாயும் சுப்பர் டீசலின் விலை 254 ரூபாயும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இலங்கை வரலாற்றில் இதுவே அதிகரித்த எரிபொருள் விலை ஏற்றமாகும்.