பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் சாரதி, கோப்பாய் பகுதியில் வைத்து கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
கத்தி வெட்டுக்கு இலக்கான பருத்தித்துறை, 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த வேலு ஜஸ்டின் ராஜ் என்பவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் நடந்துள்ளது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ்ஸில் நீர்வேலிப் பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர்.
பஸ் கோப்பாய் பகுதியை அடைந்தபோது சாரதியை கத்தியால் வெட்டி விட்டு பஸ்ஸில் இருந்து இறங்கிய இளைஞர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸாரின் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
சாரதி முகத்திலுமு், கைகளிலும் காயங்களுக்குள்ளாகியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் இனங்காணப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.