தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் தான் யாசகம் பெற்ற 20,000 இந்திய ரூபாயை பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு வழங்குவதற்காக அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார்.
கொரோனா தொற்று காலத்தில், தனது சேமிப்பிலிருந்து 10,000 ரூபாயை பல முறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணமாக வழங்கி வந்தார்.
தனது சேவை காரணமாக பொதுமக்களால் யாசகர் பூல்பாண்டியன் பாராட்டப்பட்டு வருகிறார். இதுவரை 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை கொரோனா நிவாரண நிதியாக பூல்பாண்டி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இலங்கை மக்களுக்கு உதவுமாறு தான் யாசகம் பெற்று சேமித்து வைத்த 20,000 ரூபாய் பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கியுள்ளார்.