அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் பதவி விலகிய சில மணி நேரத்துக்குள் தற்காலிக அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது.
இந்தநிலையில் நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பசில் ராஜபக்சவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.