பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று (03) காலை அறிவித்தார்.
நேற்று (02) நள்ளிரவு முதல் நாட்டில் சில முக்கிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தது.
இதன்படி, முகப்புத்தகம், யூடியுப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தது.