சகல அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவுறுத்தப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் 2021 கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை மறுதினம் (8) நிறைவடையவிருந்த நிலையில், இவ்வாறு முற்கூட்டிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாடசாலைகளின் (2022 கல்வியாண்டுக்கான) முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் முன்னர் திட்டமிட்டப்படி எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.