தற்போது பரவலாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழலில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சற்று முன்னர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணிவரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.