Update: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை!


இரண்டாம் இணைப்பு:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு:

பிரதமர் மகிந்த ராஜபக்ச,தனது பதவி விலகல் கடிதத்தை கோத்தாபய ராஜபக்சவிடம் சமர்ப்பித்துள்ளார்.

அரச மற்றும் அனைத்து கட்சிகளுக்குள் உடனடி அரசியல் உறுதித்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் தான் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 5ஆம் திகதி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.
Previous Post Next Post