பிரதமர் பதவி விலகவில்லை என்றால், தொழில்நுட்ப ரீதியாக, அமைச்சரவை கலைக்கப்படாது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின் விதி 49இன் பிரகாரம் இந்த வியாக்கியானத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சரவை தொடர்கிறது என்று அரசியலமைப்பு விவரித்துள்ளது.
அமைச்சர்கள் பதவி விலகினால் அல்லது அதனை ஏற்றுக்கொள்ளவிட்டாலும் அமைச்சரவை கலைக்கப்படுவதற்கு பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அரசியலமைப்பின் 49ஆவது பிரிவு தெரிவித்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச பிரதமராக நீடிக்க முழு அமைச்சரவை அமைச்சர்களும் பதவியை துறப்பதாக கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடிதத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் படி அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடமே ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.