யாழ்.நவாலியில் உறவினர் வீடொன்றில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய இருவர் வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்திருக்கின்றார்.
குறித்த சம்பவம் துணைவி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் துணைவி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நவாலியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்றுவிட்டு தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள் துணைவி வீதியில் உள்ள மரத்துடன் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் பின்னால் இருந்த இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து சம்பவத்தில் அராலி - செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்த புலேசாந் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.