- பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
எலிஸே மாளிகைக்கான பந்தயம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக் கட்ட வாக்களிப்புக்கு மூன்று தினங்கள் மாத் திரமே இருக்கையில் இரண்டு வேட்பாளர்களும் நேரடியாக வார்த்தைச் சமர் புரிந்த பரபரப்பான தொலைக்காட்சி விவாதம் நேற்றிரவு நடைபெற்றிருக்கிறது.
மக்ரோனுக்கா மரின் லூ பென்னுக்கா யாருக்கு வாக்களிப்பது என்பதை இறுதி நேரத்தில் தீர்மானிக்கின்ற வாக்காளர்களிடம் மிகவும் செல்வாக்குச் செலுத்தக் கூடியது என்று கருதப்படும் வேட்பாளர்களது இந்த நேரடி விவாதம் அதிபர் தேர்தல் பாரம்பரியங்களில் மிக முக்கியமான ஒன்று.
TF1 தொலைக்காட்சியின் ஆணும் பெண்ணுமாக இரு பிரபல அறிவிப்பாளர்களது நெறிப்படுத்தலில் மக்ரோனும் மரின் லூ பென்னும் உள்நாடு, ஐரோப்பா, சர்வதேசம் சம்பந்தமான தலைப்புகளில் தத்தமது
நிலைப்பாடுகளை முன்வைத்து வாதிட்டனர்.
விவாதம் நடக்கும் அறையின் வெப்ப நிலை முதல் அறிவிப்பாளர்களாக யார் வரவேண்டும் என்பது வரை வேட்பாளர்களே தீர்மானிக்கும் வகையில் போதிய சுதந்திரம் தரப்பட்டு இந்த விவாதத்தை நேற்றிரவு பல மில்லியன் பேர் நேரலையில் பார்வையிட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது.
விவாதத்தை நெறிப்படுத்த இருந்த பெண் அறிவிப்பாளர் ஒருவர் இரண்டு வேட்பாளர்களினதும் வேண்டுகோளின் பேரில் நீக்கப்பட்டு வேறொருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இரண்டரை மணி நேரம் நீடித்த விவாதத்தில் வேட்பாளர்கள் இருவரும் ஓய்வூதிய வயதெல்லை, சம்பள அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு, கொள்முதல் சக்தி எரிசக்தி நெருக்கடி, பாதுகாப்பு, மதசார்பின்மை, ஐரோப்பிய ஒன்றியம், குடியேற்றம், பருவநிலை மாற்றம், ரஷ்யா - உக்ரைன் யுத்தம், டிஜிட்டல் சந்தை உட்படப் பல விடயங்களில் பேசுவதற்கு நேரம் வழங்கப்பட்டது.
2017 தேர்தல் சமயத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த முறை மரின் லூ பென் தன்னை நன்கு தயார் செய்து கொண்டு வாதத்தில் இறங்கியிருப்பது தெரிகிறது. மக்ரோன் இடையிடையே
சீற்றத்தை வெளிப்படுத்திய நிலையிலும் லூ பென் அடக்கமாகவே வாதிட்டதை அவதானிக்க முடிந்தது.
விவாத நிகழ்ச்சிக்குப் பின்னர் வெளியாகிய சில கருத்துக் கணிப்புகளில் 59 வீதமான பார்வையாளர்கள் மக்ரோனின் வாதங்களை ஆதரித்திருக்கின்றனர்.