யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அச்சுவேலிப் பகுதியில் லொறி சில்லில் சிக்கி முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் வழங்கப்பட்டுவருகிறது. அதனைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்திருந்து நகர்ந்து சென்றுள்ளன.
அவ்வாறு நகர்ந்து சென்ற லொறி ஒன்றின் முன்பாக வீதியை நோக்கிச் சென்ற முதியவர் ஒருவர் லொறியின் சில்லில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பத்தமேனி, அச்சுவேலி என்ற முகவரியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் (வயது 77) என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அச்சுவேலிப் பொலிஸார் லொறி சாரதியைக் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.