மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் போத்தல் குத்துக்கு இலக்காகிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனையுள்ள விடுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது- 25) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மதுபான விற்பனை நிலையத்துக்கு கொல்லப்பட்டவர் உள்பட நால்வர் வருகை தந்துள்ளனர். அங்கு இருந்தவர்களுடன் கொல்லப்படவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறியுள்ளது.
அதனால் ஒருவருக்கு போத்தல் உடைத்து குத்தப்பட்டுள்ளது. அவர் உடனடியாக மந்திகை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்படுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.