ராஜபக்ச குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று நம்பப்படும் நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமானப்படைத்தளங்களை மக்கள் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.
நீண்ட போராட்டத்தின் பின் இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் வான் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயல்வதாக போராட்டக்காரர்கள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே, இவ்வாறு கண்காணிப்புகள் இடம்பெறுகின்ற அதேவேளை, திருகோணமலை கடற்படைத் தளம் ஊடாக வெளிநாடு பயணிக்கக் கூடும் என்ற ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதனையடுத்து திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றுமாறு கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பெல் 412 ஹெலிகொப்டரில் ஏறுகின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு பயணமாகியதாகவும் தெரிவிப்பு.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் குழுவொன்று, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்துள்ளனர்.