நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு! (படங்கள்)

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலையில் 5 மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்.

இவ்வாறு சித்திபெற்ற மாணவர்களுக்கு பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான புவனேஸ்வரி சற்குணசிங்கம் அவர்களின் நிதிப் பங்களிப்பின் மூலம்  கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வு நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரனின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
  
Previous Post Next Post