யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வதிரி பகுதியில் வயோதிப்பப் பெண் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வதிரி சந்திக்கு அண்மையில் தனித்து வாழும் 76 வயதுடை வயோதிப் பெண் ஒருவர், அயலவர்கள் இருவர் தம்மைத் தாக்கியதாகத் தெரிவித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இன்று முற்பகல் முறையிட்டிருக்கின்றார்.
இந்நிலையில் இன்று நண்பகலுக்குப் பின்னர் குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
சம்பவதை அடுத்து, குறித்த பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்ட இருவரையும் நெல்லியடிப் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
பிரேதப் பரிசோதனையின் பின்னரேயே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அயலவர்களுக்கும் குறித்த பெண்ணுக்கும் நீண்டகாலமாக முரண்பாடு நிலவி வந்த நிலையில் அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.