நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெறும் சிறுவர்கள் கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதுமான சம்பவங்கள் தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் சமூகத்தில் எங்கள் எதிர்கால சமூகத்தை பாதுக்காக்கும் நோக்கிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபை உறுப்பினர் தெய்வேந்திரன் கிரிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சகோதரி வித்தியா தொடக்கம் கிசாலி அட்டுலுகமா பாத்திமா ஆஷ்ஸா மற்றும் வவுனியா சகோதரி ராஜேந்திரன் யதுர்ஷி அதனை தொடர்ந்து மிருசிவில் பகுதியில் காணாமல் போன சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் அதனை தொடர்ந்து யாழ். புதிய செம்மணி வீதியில் சிறுமி கடத்தப்படும் போது தெய்வாதீனமாக மீட்கப்பட்ட சம்பவம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
எனவே இது தொடர்பாக பெற்றார் மிகவும் கூடுதலாக கரிசிலணை எடுத்து உங்கள் பிள்ளையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
அத்துடன் இது தொடர்பாக முதற் கட்டமாக எமது பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள சகல பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரதான வீதியின் சந்திகளில் இது தொடர்பான முறைப்பாடு தொலைபேசி இலக்கங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Jaffna police pirathees child woman unit 0212214063, 0774355894
Child abuse hotline 24 hours 1929
119
1984 drug prevention
Domestic violence for women 1938