குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 15 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடோன்றில் நேற்று உயிரிழந்தார்.
விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்றுநோய் இருந்ததாக கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் திடீர் இறப்பு விசாரணையில் சிறுவனுக்கு உரும்பிராயில் உள்ள நாடி வைத்தியம் செய்யப்பட்டதாக பெற்றொரினால் தெரிவிக்கப்பட்டது.
குருதிப் புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவம் உள்ள நிலையில் நாடி வைத்தியம் சிறந்தது என்று சிறுவனின் பெற்றோரினால் நம்பப்பட்ட நிலையில் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.