
வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
குறித்த தம்பதியினர் மின் ஒழுக்கு காரணமாக படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும், மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த மனைவியின் கையில் அலைபேசி சார்ஜர் வயர் இருந்துள்ளதுடன், அந்த அலைபேசி வெப்பமாகி சேமித்து வைத்திருந்த பெட்ரோல் கொனள்கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.