பிரான்ஸில் எரிபொருள் நெருக்கடி! வாகனங்களைச் சோதனை செய்யும் பெலிஸார்!! கறுப்புச் சந்தையில் விற்பனை!!! (வீடியோ)

பிரான்ஸ் பொலிசார், பெட்ரோல் நிலையங்களுக்கு வாகனங்களை அனுமதிக்கும் முன், வாகன எரிபொருள் தாங்கியை சோதனை செய்கிறார்கள். உங்கள் தாங்கியில் அதிகமாக இருந்தால், திருப்பி விடப்படுவீர்கள்.

பிரான்சில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால், மக்கள் பகுதியளவு எரிபொருளை மட்டுமே நிரப்புவதற்கு மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சூட்சுமமாக எரிபொருளை விற்றதற்காக திங்கள் முதல் செவ்வாய் வரை பிரான்ஸ் Val-de-Marne கைது செய்யப்பட்ட ஐந்து பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

20 வயது இளைஞன், பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள Arcueil என்ற இடத்தில், ஒரு எரிவாயு நிலையத்திற்கு அருகில், லிட்டருக்கு 3.50 யூரோக்களுக்கு பெட்ரோலை வழங்கியபோது, ​​அவர் 19 கான்களில் தலா 5 லிட்டர் கைவசம் வைத்திருந்து சூட்சுமமாக விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டார்.

19 முதல் 22 வயதுடைய மற்ற நான்கு ஆண்கள், Créteil, (பாரிஸ் பிராந்தியம்) ஒரு எரிவாயு நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதாக அவர்களின் காரில் தலா 50 லிற்றர் பெட்ரோல் இரண்டு கான்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதே நேரத்தில் அவர்களும் லிட்டருக்கு 3.50 யூரோக்களுக்கு வழங்கினர்.

இந்த குற்றத்திற்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் 3,750 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
  • பிரான்ஸில் எரிபொருள் நெருக்கடியால் காரை தள்ளி செல்லும் பொலிஸார்
Previous Post Next Post