உயிரிழந்த தாய் |
குறித்த தந்தை தனது பிள்ளையை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஊர்காவற்றுறை - கரம்பொன் மேற்கைச் சேர்ந்த நிரோஜினி என்ற வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவர் சுருவிலைச் சேர்ந்த நந்தகுமார் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவனை பிரிந்து சென்று வாழ்ந்து வந்த நிரோஜினி கடந்த இரு மாதத்திற்கு முன்னரே கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
எனினும், சில நாட்களுக்கு முன்னர் அந்த பெண் உயிரிழந்த நிலையில், தற்போது நான்கு வயதான குழந்தையை தந்தை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த குடும்பஸ்தர் போதைக்கு அடிமையானவர் என்றும், சம்பவம் தொடர்பில் தற்போது ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.