பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் குடியேறிகளுக்கு எதிராக எம்பி ஒருவர் வெளியிட்ட வார்த்தைகள் "இனத் துவேஷம்" கொண்டவை என்று கருதப்படுவதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
"Qu'il retourne en Afrique!" என்ற பிரெஞ்சு வார்த்தையின் ஆங்கில அர்த்தம் "They should go back to Africa!" என்றே அமையும். ஆனால் பிரெஞ்சு மொழியில் "அவன்"("il") என்பதும் "அவர்கள்"("ils") என்பதும் ஒருவனையும் பலரையும் ("he" and "they") குறிக்கின்ற ஒரே அர்த்தத்தைத் தரக்கூடியது.
தனது சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பார்த்து "Qu'il retourne en Afrique!" என்ற வார்த்தையைக் கூறிய தீவிர வலது சாரி எம்பியின் கூற்றால் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அவர் அந்தக் கறுப்பின உறுப்பினரையா( he) அல்லது படகு அகதிகளையா (they) ஆபிரிக்காவுக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறினார்? பிரெஞ்சு மொழியின் அர்த்தம் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஆபிரிக்காவில் இருந்து மத்தியதரைக் கடல் கடந்து வருகின்ற புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பாக இடதுசாரி எம்பி ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர் தீவிர இடதுசாரி ஜீன் லூக் மெலன்சோனின் La France Insoumise (LFI) கட்சியைச் சேர்ந்த - ஆபிரிக்கக் கறுப்பின எம்.பி ஆவார். கடலில் தத்தளிக்கின்ற ஆபிரிக்க அகதிகளை மீட்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கின்றனவா என்று அந்த எம்.பி சபையில் கேள்வி எழுப்பினார். அச்சமயம் திடீரெனக் குறுக்கிட்ட தீவிர வலதுசாரி எம்பி ஒருவர், "அவர்கள் ஆபிரிக்காவுக்குத் திரும்பிச் செல்லட்டும்"("Qu'il retourne en Afrique!") "வேறு வழி இல்லை" ("Pas du tout !") என்று கூறினார். அவரது வார்த்தைகள் சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. கறுப்பின எம்பி ஒருவரது கேள்விக்கு இவ்வாறு ஆபிரிக்கர்களுக்கு எதிரான இனவெறி சார்ந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதை ஏனைய உறுப்பினர்கள் பலர் கண்டித்தனர். அந்தக் குழப்பத்தினால் சபாநாயகர் சபை அமர்வை ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது.
மரின் லூ பென் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த கிரேகுவா து பூர்னா(Grégoire de Fournas) என்பவரே தனது சக ஆபிரிக்க இன உறுப்பினர் கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ (Carlos Martens Bilongo) என்பவரை நோக்கி "நீ ஆபிரிக்காவுக்குத் திரும்பிப் போ" என்ற ("Qu'il retourne en Afrique!") மறைமுக அர்த்தம் தரும் வார்த்தையை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்காக நாடாளுமன்ற ஒழுங்கு விதிகளின் கீழ் அவர் சபை நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டமை மிக மிக அரிதாகும்.
வெளிநாட்டுக் குடியேறிகளை நாட்டுக்குள் உள்வாங்குதல், அவர்களை வெளியேற்றுதல் தொடர்பான மக்ரோன் அரசின் கொள்கைகளைத் தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத எலிசபெத் போர்ன் அரசு, வரவு-செலவுத் திட்டம் உட்பட முக்கிய நிதிச் சட்டப் பிரேரணைகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகிறது.