யாழ்.கொக்குவில் இந்து மயானத்தைச் சூழவுள்ள பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் அப் பகுதியில் வாழும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த மாயனத்தில் எரியூட்டப்படும் சடலங்களுக்கான சடங்குகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் சட்டி, பெட்டி போன்ற குப்பைகள் மயானத்திற்கு வெளியில் வீசப்பட்டு வருகின்றது.
இதனால் அதனைச் சூழவுள்ள மக்களின் குடியிருப்புக்களுக்குள் அப் பொருட்களை நாய்கள் எடுத்துச் சென்று போடுவதாலும், காககங்கள் அதனை எடுத்துக் கொண்டு கிணறுகளுக்குள் போடுவதாலும் சுகதார சீர்கேடுகள் இடம்பெறுவதாக அப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை குறித்த பொருட்களில் தேங்கிக் கிடக்கும் மழை நீரினால் நுளம்புப் பெருக்கம் அதிகரித்து டெங்கு நோய்த் தாக்கம் ஏற்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே மயானத்தின் தூய்மைத் தன்மையை நல்லூர் பிதேச சபை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.