யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொக்கணை பகுதியில் 180 லீட்டர் கோடா மற்றும் 40 லீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் உட்பட இருவர் இன்றையதினம் (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
180 லீட்டர் கோடா மற்றும் 30 லீட்டர் கசிப்பினை காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.