யாழில் கடன் தொல்லை காரணமாக வர்த்தகர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகராவார். குறித்த நபர் யாழ்.நகரில் மீற்றர் வட்டிக்கு பணத்தைப் பெற்று அழகு சாதன விற்பனை நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.
மீற்றர் வட்டிக்கு எடுத்த பணத்தைச் செலுத்துவதற்கு மீண்டும் மீற்றர் வட்டிக்கு பணம் எடுத்ததன் காரணமாக வட்டிக்கு மேல் வட்டி ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலை விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
வர்த்தகரின் உயிரிழந்தமை தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.