யாழ்ப்பாணம் செம்மணி குளத்தில் நேற்று முன்தினம் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர் நீண்ட நேர தேடுதலின் பின்னர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞன் யாழ். செம்மணிக் குளத்தில் மீன் பிடித்து விட்டுக் குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்ற உதமதாசன் சயந்தன் (வயது-23) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
அத்துடன் பாடசாலையில் பளு தூக்கும் அணியில் 3 தடவைகள் சம்பியன் பட்டம் பெற்றவர் என்பதுடன், அணியினைத் தலைமை தாங்கியவருமாவார். அத்துடன் தற்போது குறித்த பாடசாலையில் பளு தூக்கும் அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.