ஜேர்மனியில் புதிய குடியுரிமைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவிருப்பதுடன் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜேர்மனியின் உள்ளுராட்சி, சமஷ்டி அமைச்சரவைகள் வெகுவிரைவில் புதிய பிரஜாவுரிமைச் சட்டத்தின் சட்ட நகலைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந் நாட்டுப் பத்திரிகைகளின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆளும் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான FDP ஆனது இந்தப் புதிய பிரஜாவுரிமைச் சட்ட நகலுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜேர்மனியின் பிரதான எதிர்க்கட்சியான CDU மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சியான AFD போன்ற கட்சிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த சட்டம் தொடர்பில் சமஷ்டி உள்ளுராட்சி அமைச்சர், ஜேர்மனியில் இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தை அமுல்படுத்தப்போவதாக குறித்த சட்ட நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியில் 2020 ஆம் ஆண்டு மொத்தமாக வெளிநாட்டவர்கள் தொகையில் 1.1 சதவீதமான வெளிநாட்டவர்களே பிரஜாவுரிமைக்கு விண்ணம் செய்தார்கள் என்றும், 2021 இல் 2.6 வெளிநாட்டவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.